115,867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியது.
“பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகளை குறைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல்” என்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து வர்த்தக அமைச்சர் தலைமையிலான குழுவொன்று நிவாரணம் வழங்குவது தொடர்பான தீர்மானத்தை பரிசீலித்து பரிந்துரையை வழங்கிய நிலையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.














