சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், நேர்வே தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது.
ஒன்பது தங்க பதக்கங்கள், ஐந்து வெள்ளி பதக்கங்கள், ஏழு வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 21 பதக்கங்களுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது.
ஜேர்மனி, எட்டு தங்க பதக்கங்கள், ஐந்து வெள்ளி பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 15 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா, ஏழு தங்க பதக்கங்கள், ஆறு வெள்ளி பதக்கங்கள், மூன்று வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 16 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒஸ்திரியா, ஆறு தங்க பதக்கங்கள், ஆறு வெள்ளி பதக்கங்கள், நான்கு வெண்கல பதக்கங்களுடன் என மொத்தம் 16 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
நெதர்லாந்து, ஆறு தங்கபதக்கங்கள், நான்கு வெள்ளி பதக்கங்கள், இரண்டு வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சீனா, சுவீடன், ரஷ்யா, சுவிஸ்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையே ஆறு முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன.