இந்தியாவுக்கு எதிராக நேற்றிரவு (28) நடைபெற்ற நான்காவது டி20 சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது டிம் சீஃபர்ட் (36 பந்துகளில் 62 ஓட்டம்) மற்றும் டெவோன் கான்வே (23 பந்துகளில் 44 ஓட்டம்) ஆகியோரின் அதிரடியான தொடக்கத்துடன் 8.2 ஓவர்களில் 100 ஓட்டங்களை சேர்த்தது.
இதையடுத்து இந்தியப் பந்து வீச்சாளர்கள் பந்துப் பரிமாற்றத்தில் நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவினை ஏற்படுத்தினர்.
பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைனிடையே, டேரில் மிட்செல் 18 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து கடைசி நேரத்தில் நியூஸிலாந்து அணிக்கு உத்வேகம் அளித்தார்.
இறுதியாக 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு நியூஸிலாந்து 215 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு சிவம் துபே 23 பந்துகளில் 65 ஓட்டங்களும், ரிங்கு சிங் 30 பந்துகளில் 39 ஓட்டங்களும் எடுத்து மகத்தான பங்களிப்பினை வழங்கினர்.
இருந்த போதிலும் இந்தியா 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூசிலாந்து அணியின் சிறந்த பந்து வீச்சாளராக அணித் தலைவர் மிட்செல் சாண்ட்னர் நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக டிம் சீஃபர்ட் தெரிவானார்.
















