கீனிகம ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் பிரதான ரயில் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் பல ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இதன்படி, கீனிகம ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள், அல்லது அதன் ஊடாக பயணிக்கும் புகையிரதங்கள் மிகவும் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
















