நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி , “போடா போடி“ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவருக்கு சினிமாவில் நாயகியாக பெரிய இடம் கிடைக்கவில்லையென்றாலும் கம்பீரமான வில்லி கதாபாத்திரங்கள் அமைந்து வருகின்றன. இறுதியாக , இவர் நடித்த மைக்கல், யசோதா, ஹனுமன் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.
தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கும் ஓவியம் மற்றும் கலைப்பொருள்களை விற்பனை செய்து வரும் தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் நேற்றுமுன்தினம்(1) திருமண நிச்சயம் நிகழ்ந்துள்ளது.
இந்நிச்சயம் இருவீட்டார் சம்மத்துடன் நிகழ்ந்துள்ளது. இதனால், விரைவில் தன் 14 ஆண்டுகால நண்பரான நிகோலய் சச்தேவை வரலட்சுமி திருமணம் செய்கிறார்.


















