கொழும்பை சுற்றியுள்ள பிரதான புகையிரத நிலையங்களில் அமைந்துள்ள கட்டிடங்களை வர்த்தக நிலையங்களாக தரமுயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.
அதன்படி வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையங்கள் அதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக தெஹிவளை மற்றும் கல்கிசை புகையிரத நிலையங்களை அரச – தனியார் பங்களிப்புடன் கீழ் நிர்மாணம், செயற்பாடு மற்றும் ஒப்படைப்பு முறையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து இது தொடர்பான திட்டமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து இந்த அமைச்சரவைப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.