வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சடலமானது சிதைவடைந்த நிலையில் உள்ளமையால் , உயிரிழந்தவர் சில தினங்களுக்கு முன்னராகவே இறந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.