கண்டி, அகுரணப் பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பல வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகுரணையில் 7-வது கிலோமீட்டர் மைல்கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தினால் கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


















