பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது.பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுமார் 1 இலட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பழனியில், உலக அளவில் முருகன் மாநாடு நடப்பதால் பழனியே விழாக்கோலம் பூண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.



















