2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி முதன்முறையாக பட்டத்தை வென்றதன் மூலம் வியத்தகு முறையில் நிறைவடைந்தது.
ஆனால் இந்தப் போட்டி தனிப்பட்ட திறமையின் கொண்டாட்டமாகவும் இருந்தது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் மற்றும் அணிகள் பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
ஆரஞ்சு கேப் : குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சாய் சுதர்சன் ஐபிஎல் 2025 தொடரில் 15 போட்டிகளில் விளையாடி, ஒரு சதமும் ஆறு அரை சதங்களும் உதவியுடன் மொத்தமாக 759 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

பேர்ப்பிள் கேப்: ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய 29 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, மொத்தமாக 25 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன்: பெங்களூரு அணிக்காக குருணால் பாண்டியா 4 ஓவர்களில் 17 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
வளர்ந்து வரும் இளம் வீரர் ( Emerging Player of the Season) :ஐபிஎல் 2025 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சாய் சுதர்சன் அனைத்து 15 போட்டிகளிலும் விளையாடி, மொத்தமாக 759 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவருக்கு வளர்ந்து வரும் இளம் வீரர் விருதும் வழங்கப்பட்டது. அதிக பவுண்டரி (87) அடித்த வீரரும் சாய்சுதர் தனா். நடப்பு சீசனில் சாய்சுதர்சன் அதிக ஓட்டம், அதிக பவுண்டரி, வளர்ந்து வரும் இளம் வீரர் மற்றும் பேண்டஸி பாயிண்ட் என 4 விருதுகளை வென்றுள்ளார்.
சூப்பர் ஸ்ட்ரைக்கர்: 14 வயதுடைய சூர்யவம்ஷி, ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஏழு போட்டிகளில் 206.55 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் 252 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அதிகம் சிக்ஸர்கள் அடித்தவர்: ஐபிஎல் 2025 போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அனைத்து 14 லீக் போட்டிகளிலும் விளையாடிய நிக்கோலஸ் பூரன், மொத்தமாக 40 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
சிறந்த பிடியெடுப்பு : ஏப்ரல் 25 அன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த சென்னை – ஐதராபாத் போட்டியில், டெவால்ட் ப்ரெவிஸின் கேட்சிற்காக சன்ரைசர்ஸ் வீரர் கமிந்து மெண்டிஸ் இந்த விருதை பெற்றார்.
ஃபேர் பிளே விருது: சென்னை சூப்பர் கிங்ஸ்
மிக மதிப்புமிக்க வீரர் விருது:ஐ பிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், மொத்தமாக 717 ஓட்டங்களை எடுத்தார். அவர் விளையாடிய அனைத்து 16 போட்டிகளிலும் குறைந்தது 25 ஓட்டங்களை கடந்தார்.
பிச்ச் மற்றும் மைதான விருது: அருண் ஜேட்லி மைதானம், டெல்லி



















