தேசிய மீன்பிடிக் கப்பல் கணக்கெடுப்பு இன்று (04) தொடங்க உள்ளது.
இதன் முதல் கட்டம் இன்று பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் தொடங்கி, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மீன்பிடி படகு கணக்கெடுப்பு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர், முழு நாட்டையும் உள்ளடக்கியதாக நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் நாட்டின் மீன்பிடிப் படகுகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவு அமைப்பு ஒன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதுடன், கணக்கெடுப்பிற்கு உட்படாத படகுகளின் இயக்க அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்காமல்விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.















