சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து சன் பிக்சர்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் இன்று (28) தள்ளுபடி செய்தது.
இதன் மூலம் 18 வயதுக்குட்பட்டவர்கள் திரையரங்குகளில் படத்தைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
ஆகஸ்ட் 4 ஆம் திகதி கூலி படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
சன் பிக்சர்ஸ் அதற்கு எதிராக ஆகஸ்ட் 18 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ‘A’ சான்றிதழ் பெற்ற முதல் ரஜினிகாந்த் திரைப்படம் கூலி ஆகும்.
1989 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியான சிவா திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் நடித்த கூலி ஆகஸ்ட் 14 அன்று வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

















