ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (30) டோக்கியோவில் 16 ஜப்பானிய மாகாணங்களின் ஆளுநர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இந்தியா-ஜப்பான் விசேட மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் கீழ் மாநில-மாகாண ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் உத்தியோகப்பூர் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மோடி, நேற்று அந் நாட்டுப் பிரதமர் இஷிபாவுடன் உச்சிமாநாட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இதன்போது, ஜப்பான் அடுத்த ஒரு தசாப்தத்தில் இந்தியாவில் 10 டிரில்லியன் யென் முதலீடு செய்யும் இலக்கை அறிவித்தது.
இதையடுத்து இரு தரப்பினரும் பாதுகாப்பு உறவுகளுக்கான கட்டமைப்பு, பொருளாதார கூட்டாண்மையை பெருமளவில் முன்னேற்றுதவற்கான 10 ஆண்டு கால ஒரு கூட்டு தொலைநோக்கு திட்டங்களையும் ஏற்றுக் கொண்டனர்.




















