முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது தனக்கு ஆதரவாக நின்ற தனது ஆதரவாளர்களுக்கு 19 வினாடிகள் கொண்ட சிறப்பு காணொளியில் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளியில் முன்னாள் ஜனாதிபதி, ஆன்லைத் தளத்தில் இருந்தவர்கள் உட்பட தனது அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், தனக்கு ஆதரவளித்தவர்களை எதிர்காலத்தில் சந்திக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டு தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு வெளிநாட்டுப் பயணமாகச் சென்றதாகக் கூறப்படும் ரணில் விக்கிரமசிங்க, 16.9 மில்லியன் ரூபாய் அரசு நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ் இருந்தார்.
இருப்பினும், நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.















