ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இருதரப்பு சந்திப்பில் திங்களன்று (01) பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.
இதன்போது, இந்தியா – ரஷ்யாவுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் மிக முக்கியமானது என்று இதன்போது மோடி சுட்டிக்காட்டினார்.
ரஷ்ய பிரதமரும் இந்தக் கருத்தினைையே முன்வைத்தார்.
மேலும், இந்த சந்திப்பு இந்தியா-ரஷ்யா உறவுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் புட்டினின் வருகையை எதிர்பார்த்து 140 கோடி இந்தியர்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அத்துடன், ரஷ்யாவும் உக்ரேனும் விரைவில் தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பார்கள் என்று நம்புவதாகவும் இந்தியப் பிரதமர் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டு நாள் கூட்டத்திற்கு இடையே, சீன துறைமுக நகரமான தியான்ஜினில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.



















