கொஹுவல, சரணங்கர வீதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெள்ளவத்தை, கோகில வீதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவரது சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குக் காரணமான சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
அதே நேரத்தில் சந்தேக நபரைக் கைது செய்ய கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














