அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இந்த வாரம் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸுடன் விமானம் மற்றும் வண்டிப் பயணம் முதல் வரலாற்று சிறப்புமிக்க வின்ட்சர் கோட்டையில் ஒரு பிரமாண்டமான அரசு விருந்து வரையான நிகழ்வுகளில் அவர் இதன்போது பங்கெடுக்கவுள்ளார்.
வர்த்தகம், வரிகள் மற்றும் உக்ரேன் போர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரையும் இதன்போது அமெரிக்க ஜனாதிபதி சந்தித்து பேசவுள்ளார்.
2019 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில், இரண்டாம் எலிசபெத் மகாராணியைச் சந்தித்தபோது, ட்ரம்ப் தனது முந்தைய ஐக்கிய இராஜ்ஜியத்துக்கான அரசுப் பயணம் குறித்து அடிக்கடி பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் புதிய விஜயம் மூலம் இரண்டாவது அரசுப் பயணம் மேற்கொள்ளும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக அவர் மாறுவார்.
குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த விஜயம் அமையவுள்ளது.
















