தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது இவர் ராட்சசன் 2 , கட்டா குஸ்தி 2 , ஆர்யன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
விஷ்ணு விஷால், கடந்த 2010-ம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.
இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை, விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பாலிவுட் நடிகர் அமீர்கான் அந்த குழந்தைக்கு ‘மிரா’ என பெயர் சூட்டியுள்ளார்.

இந்நிலையில், பெண் குழந்தையை பெற்றெடுத்த ஜூவாலா கட்டா தற்போது தனது தாய்பாலை தானம் அளிக்க முன்வந்துள்ளார். அதாவது, சென்னை அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி தாய்பாலை அவர் தானம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தாய் இன்றி ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு தாயாக உதவும் வகையில் ஜூவாலா கட்டா இந்த முன்னெடுத்துள்ளதார். இதுவரை அவர் அவர் சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஜூவாலா தாயாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















