முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொது மக்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
2022 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 ஆவது பிரிவின் கீழ், ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ், உரிமதாரரால் (இலங்கை மின்சார சபை) 2025 ஆம் ஆண்டிற்கான 03 ஆவது உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டத்தைப் பற்றிய பொது ஆலோசனைக் கேட்டலை நடத்துவதற்கான முடிவு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு மற்றும் அது தொடர்பான ஆலோசனை பத்திர அறிக்கைகளை www.pucsl.gov.lk என்ற இணைத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொது மக்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த கட்டண திருத்தம் தொடர்பான வாய்மொழி கருத்துக்களை தெரிவிக்கும் அமர்வு 2025 செப்டெம்பர் 18 முதல் 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி முதல் ஒன்பது மாகாணங்களிலும் நடைபெறும்.
முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம் தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பின்வரும் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிட்டுள்ள ஏனைய முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம்.














