ரிசப் செட்டியின் இயக்கத்தில் உருவாகி கடந்த 2 ஆம் திகதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு கொண்டிருக்கும் திரைப்படம் காந்தாரா செப்டர் 1.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த காந்தாரா படத்தை போலவே அதன் தொடர்ச்சியான காந்தாரா செப்டர் 1 திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரு வரவேற்பை பெற்றுள்ளது.
ரிசப் செட்டி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அவருக்கு இணையாக நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜெயராம்,குல்சன் தேவய்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமான தொழினுட்ப அடித்தளத்தில் உருவாகிய இத்திரைப்படம் கேஜிஎப் வசூலையும் மிஞ்சி பான் இந்தியா திரைப்படங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் நான்கே நாட்களில் 400 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் வியக்க வைக்கும் வகையிலான காட்சிகள் உள்ளடங்கியிருப்பதாக தெரிவித்து, உலகெங்கும் இருக்கும் இரசிகர்கள் காந்தாரா செப்டர் 1 ஐ திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.


















