டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலின் ஆட்டமிழக்காத அரைசதத்தினால் (58) இந்தியா, மேற்கிந்தியத்தீவுகளை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக சுப்மன் கில் தலைமையிலான அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
முன்னதாக அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை தோற்கடித்திருந்தது.
இது சுப்மான் கில் தலைவராக செயற்பட்டு இந்தியாவுக்காக பெற்றுக் கொடுத்த இந்தியாவுக்கான முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.
முன்னதாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் போட்டியில் தலைவராக செயற்பட்டு தொடரை 2-2 என்ற கணக்கில் சமப்படுத்தியிருந்தார்.
இதேவேளை இந்த தோல்வியானது மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 10 ஆவது தொடர் தோல்வியை குறிக்கிறது.
இது முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களின் மோசனமான சாதனையாகும்.




















