தலாவ, முதுனேகம மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (14) அதிகாலை ஒரு தொகை வெடிமருந்துகள் மற்றும் வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட தோட்டாக்கள் T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுபவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம பொலிஸ் அதிகாரிகளால் இந்த வெடி மருந்துகள் மற்றும் தோட்டாக்கள் என்பவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தற்போது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














