கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் குற்றவாளி எனக் கண்டறிந்துள்ளது.
இது அவரது அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
நாடுகடத்தப்பட்ட ஹசீனா, நீதிபதிகள் முன்னிலையாகாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம், ஹசீனாவின் இரண்டு உதவியாளர்களான முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோருக்கு எதிராகவும் இதே குற்றச்சாட்டுகளின் பேரில் தனது தீர்ப்பை அறிவித்தது.
மாமுன் விசாரணையின் போது தீர்ப்பாயத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், சிறப்பு தீர்ப்பாயத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புக்கு முன்னதாக, மொஹமட் யூனுஸ் ஆட்சி டாக்கா மற்றும் பிற பகுதிகளில் அவ்வப்போது வன்முறை மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
டாக்காவில் ஹசீனாவின் 15 ஆண்டுகால இரும்பு பிடி முடிவுக்கு வந்ததிலிருந்து வங்கதேசம் அரசியல் கொந்தளிப்பில் உள்ளது.
மேலும், 2026 பெப்ரவரியில் எதிர்பார்க்கப்படும் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தை வன்முறை பாதித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஹசீனா அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயன்றபோது நடத்தப்பட்ட அடக்குமுறைகளில் 1,400 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்த மரணங்கள் அவரது விசாரணையின் மையமாக இருந்தன.
ஹசீனா மீது ஐந்து குற்றச்சாட்டுகளை வழக்குரைஞர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவற்றில் கொலையைத் தடுக்கத் தவறியது, வங்கதேச சட்டத்தின் கீழ் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை அடங்கும்.















