இங்கிலாந்து வானிலை அலுவலகம் (Met Office), இந்த வார இறுதி முதல் அடுத்த வார தொடக்கம் வரை இங்கிலாந்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த அமைப்பால் ஏற்படும் இந்த மழை, பல பகுதிகளில் 50 மி.மீ வரை பெய்யக்கூடும்.
இது போக்குவரத்து தடைகள் மற்றும் மேற்பரப்பு வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலைகள் மற்றும் ரயில் சேவைகளில் தாமதங்கள் ஏற்படும் என்றும், குறிப்பாக வேல்ஸ், மிட்லாண்ட்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் வாகனங்களை ஓட்டுவது சிரமமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளுக்கு வரண்டதாகவும், அதிக குளிருடனும் காணப்படும், எனினும், வார இறுதியில் தென்மேற்கிலிருந்து வரும் மற்றொரு அட்லாண்டிக் அமைப்பு மீண்டும் புயல் காற்றுடன் மழையை ஈரோடுத்தக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.














