குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் சட்டவிரோதமாக தொழில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 60 டெலிவரி ரைடர்களை இங்கிலாந்து நாடு கடத்துகிறது.
கிக் பொருளாதாரம் (தற்காலிக வேலைச் சந்தை) என்று அழைக்கப்படும் தொழிலாளர்களுக்கு எதிரான இலக்கு நடவடிக்கை கடந்த மாதம் நாடு முழுவதும் 171 கைதுகளுக்கு வழிவகுத்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சோலிஹல்லில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் சீன நாட்டினர், கிழக்கு லண்டனில் உள்ள வங்கதேச மற்றும் இந்திய ரைடர்கள் மற்றும் நார்விச்சில் உள்ள இந்திய டெலிவரி ரைடர்கள் அடங்குவர்.
இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக வருபவர்களைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அங்கு சட்டவிரோதமாக வேலை செய்பவர்களைத் தடுக்க அமைச்சர்கள் முயற்சிக்கும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் செப்டம்பர் வரையிலான ஆண்டில் 8,232 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடும்போது 63% அதிகரிப்பாகும்.













