நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸுல் விளையாடிய டெவன் கொன்வே இரட்டை சதத்தை எட்டினார்.
இதன் மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது நாள் (வெள்ளிக்கிழமை) மதிய உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து 424/3 ஓட்டங்களை எடுத்தது.
முதல் டெஸ்ட் சமனிலையில் முடிந்த பின்னர் நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது டெஸ்ட்டை நியூஸிலாந்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த நிலையில் மவுண்ட் மௌங்கானுயில் நேற்று (18) ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முழுவதும் துடுப்பாட்டம் செய்த பின்னர் கொன்வே 178 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
அதில் அவர் டோம் லாதமுடன் (137 ஓட்டங்கள்) இணைந்து வலுவான இணைப்பாட்டத்தை உருவாக்கி, தொடக்க விக்கெட்டுக்காக 323 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.
















