இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிப்பதற்காக உலக வங்கியின் நிர்வாக பணிப்பாளர்கள் குழு இன்று 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டம் இலங்கையின் டிஜிட்டல் துறையில் புதுமை மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும், அரசு சேவைகளை நவீனமயமாக்கும், மேலும் அவற்றை எளிதாக அணுகவும் மக்கள் மற்றும் வணிகங்களின் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்றும்.
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஊடாக அரசாங்க சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய இணையத்தள உருவாக்கம், அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கான வசதி மற்றும் தேவைக்கேற்ப விரிவாக்கக்கூடிய நவீன தரவுத் தளம் போன்ற வசதிகள் உருவாகும்.
இந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு முதலீடுகளுடன், பொதுமக்களும் அரச ஊழியர்களும் இந்த புதிய சேவைகளை தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதற்குத் தேவையான பயிற்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.g















