வார இறுதியில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ், தாய்லாந்து புதன்கிழமை 18 கம்போடிய வீரர்களை விடுவித்ததாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இதனால், பல வாரங்களாக நீடித்த கொடிய எல்லை மோதல்களுக்குப் பின்னர் பதட்டங்கள் தணிந்தன.
155 நாட்கள் தாய்லாந்து காவலில் இருந்த பின்னர் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 10 மணிக்கு (03.00 GMT) எல்லைச் சோதனைச் சாவடியில் வீரர்கள் மாற்றப்பட்டதாக கம்போடியப் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா உறுதிபடுத்தினார்.

தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகள் சனிக்கிழமை நண்பகல் (05.00 GMT) மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டன.
இதன் மூலம் சுமார் 20 நாட்கள் நடந்த மோதல்கள் முடிவுக்கு வந்தன.
இதில் குறைந்தது 101 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரு தரப்பிலும் அரை மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர்.
மோதலில் ஜெட் தாக்குதல்கள், ரொக்கெட் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
















