இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ தனது (Sunninghill Park) சன்னிங்ஹில் பார்க் இல்லத்தை விற்றதில் ஊழல் மற்றும் இலஞ்ச புகார்கள் எழுந்துள்ளன.
கசகஸ்தான் அதிபரின் மருமகனான ( Timur Kulibayev ) திமூர் குலிபயேவ், சந்தை மதிப்பை விட மிக அதிக விலைக்கு இந்த மாளிகையை வாங்கியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இத்தாலிய அதிகாரிகளால் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒரு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட நிதியைக் கொண்டே இந்த விற்பனை நடந்துள்ளதாக சந்தேகிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் முறையான சோதனைகளை மேற்கொள்ளாமல் இளவரசர் தரப்பு குற்றச் செயல்களின் மூலம் ஆதாயம் அடைந்திருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும், வாங்குபவர் தரும் விலையை ஏற்பது மட்டுமே தனது வேலை என்றும் இளவரசர் ஆண்ட்ரூவினால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரம் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கும் கசகஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய நிதித் தொடர்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இத்தாலிய அரசு வழக்கறிஞர்களின் ஆய்வுகள் இந்த பணப் பரிமாற்றத்தில் உள்ள நிழல் உலகத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.














