2026 ஆம் ஆண்டின் முதல் 13 நாட்களில் நாடு முழுவதும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் மொத்தம் 82 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகன் செலுத்தியதால் இடம்பெற்றதாக வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர குறிப்பிட்டார்.
இலங்கையில் ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
மது போதையில் வாகனம் செலுத்துவர்களை கண்டறிவதற்கான மூச்சுப் பரிசோதனை கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறிவதற்காக கொழும்பில் ஒரு முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மது அல்லது பிற போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண நடமாடும் போதைப்பொருள் சோதனை அலகுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.












