இலங்கையுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்காக இங்கிலாந்து அணியானது இன்று (19) காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
இன்று காலை 08.20 மணியளவில் இங்கிலாந்து அணியினர் எமிரேட்ஸ் விமானம் மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியை வரவேற்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜனவரி 22 ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்த சுற்றுப் பயணத்தில் இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடும்.
போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகல மைதானங்களில் நடைபெறும்.






















