வில்பத்து தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தங்கியிருந்த மூன்று சந்தேக நபர்களை வனவிலங்கு அதிகாரிகள் ஜனவரி 14 ஆம் திகதி கைது செய்தனர்.
அங்கு அவர்கள் தற்காலிக முகாம்களை அமைத்து காட்டு விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படுகிறது.
இதன்போது, சந்தேக நபர்கள் வேட்டையாடுதல் நடவடிக்கைக்காக பயன்படுத்திய 12-துளை துப்பாக்கியையும், ஒரு தொகை தொட்டாக்களையும் மற்றும் கூரிய ஆயுதங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 66 கிலோ கிராம் மான் இறைச்சியையும், 18.3 கிலோகிராம் காட்டுப்பன்றி இறைச்சியையும் அதிகாரிகள் மீட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் மூன்று சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளனர்.
அவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனவிலங்குகள் மீதான குற்றம் தொடர்பான விவரங்கள் ஜனவரி 16 அன்று நொச்சியாகம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் ஜனவரி 26 ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டனர்.












