ஜப்பானின் பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்து, தனது செலவுத் திட்டங்கள் மற்றும் பிற கொள்கைகளுக்கு வாக்காளர் ஆதரவைப் பெற பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறியுள்ளார்.
நாட்டின் முதல் பெண் பிரதமராக அவர் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு திங்கட்கிழமை (19) திடீர் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெறும் விரைவான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள 465 இடங்களையும் தீர்மானிக்கும்.
மேலும் பிரதமரான பிறகு தகைச்சியின் முதல் தேர்தல் இதுவாகும்.
முன்கூட்டியே தேர்தலை நடத்துவது, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) மீதான தனது பிடியை இறுக்கிக் கொள்ளவும், தனது கூட்டணியின் பலவீனமான பெரும்பான்மையை வலுப்படுத்தவும் வலுவான மக்கள் ஆதரவைப் பயன்படுத்திக் கொள்ள அவருக்கு உதவும்.














