ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா ( Doda) மாவட்டத்தில் உள்ள படேர்வா பகுதியில் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஏழு பேர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொத்தம் 17 வீரர்களை ஏற்றிச் சென்ற இராணுவ வாகனம், உயரமான ஒரு பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதன் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக 200 அடி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.















