மரண அறிவித்தல் – தர்மலிங்கம் இராமசந்திரா
பிறப்பு
11/07/1947இறப்பு
06/11/2024தர்மலிங்கம் இராமசந்திரா (லிங்கம்)
ஓய்வுநிலை அரச பண்ணை முகாமையாளர்
வயது: 77
வேலணை மேற்கு - கொழும்பு, வவுனியாவை
தர்மலிங்கம் இராமசந்திரா (லிங்கம்)
(ஓய்வுநிலை அரச பண்ணை முகாமையாளர்)
வேலனை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட இராமசந்திரா (லிங்கம்) 6.11.2024 அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற தர்மலிங்கம் ஆச்சிப் பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலம் சென்றகந்தசாமி பாலாம்பிகை தம்பதிகளின் மருமகனும் ஆவார்.
புளியங்கூடல் ரஜனி (ஜெயந்தி) என்பவரின் அன்புக் கணவரும், நிரூசியா (லண்டன்) தனுஷன் (லண்டன்) நிரூஷன் (கனடா) நித்யா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜனனி, பிரியா, யசான் ஆகியோரின் அன்பு மாமனாரும் டானியா, சியானா, ரதீஷா, தனிஷா, அஸ்வின், ஆரவ் ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.
இலச்சுமிப்பிள்ளை (கனடா) காலம் சென்றவர்களான கந்தையா, நாகம்மாள், பூபதி இராஜரெட்ணம் ஆகியோரதும் மற்றும் திலகம் பாலகுமாரன் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 09-11-2024 சனிக்கிழமை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையலில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-11-2024 ஞாயிற்றுக் கிழமை 11.00 மணிதொடக்கம் 01.30 மணிவரை The Respect Home – 483, Bauddhaloka Mawatha, Colombo 8 இல் இறுதிச் சடங்கு நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றாா், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகன் : தனுஷன்
தொலைப்பேசி எண் : 0044 7979 92 46 58
க. குகனேசன்
பெறா மகன்
தொலைப்பேசி எண் : 076 666 1351