புத்தாண்டு காலப்பகுதியில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சி.டபிள்யூ கிளை வலையமைப்பு ஊடாக குறித்த நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அரிசி, மாவு, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி, எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சதொச கிளைகளில் 1000 ரூபாய் விலையில் கிடைக்கும் எனவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்ற விசேட நடமாடும் விற்பனை நிலையங்களிலும் இந்த உணவு பொதியினை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் சுகாதார நடைமுறைகளை இதன்போது கடைபிடிக்க வேண்டியதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.