இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 249 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 88ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 88 ஆயிரத்து 623 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 904 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவர், டிசம்பர் மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் தீவிர நீரிழிவு நோய் நிலையே மரணத்திற்கான காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561ஆக அதிகரித்துள்ளது.