தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில், ‘தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் 2 ஆம் திகதிவரை வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாதவகையில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி நேற்று 40.1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.