நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தனது நாடாளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு இன்று (31) அறிவிக்கப்பட இருந்தது.
குறித்த மனு இன்று நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகேர மற்றும் மாயதுன்ன ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பு குறித்து இன்னும் இறுதி செய்யவில்லை என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பினை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வழங்குவதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் நாடாளுமன்ற பொதுச்செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.