புற்றுநோயை ஏற்படுத்தும் திரவம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களும் 13 ஆம் திகதி மலேசியாவுக்கு அனுப்பப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் மதிப்பு 377 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
105 மெட்ரிக் டொன் எடையுள்ள தேங்காய் எண்ணெயை மீள் ஏற்றுமதிகாக கொழும்பு துறைமுக புறப்பாடு முனையத்திற்கு நேற்று பிற்பகல் கொண்டு செல்லப்பட்டது.
தனியார் நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் எப்லடொக்சின் என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.