அஜித் மானபெரும நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்திற்கே அஜித் மானப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருடங்கள், கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 12ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, தனது நாடாளுமன்ற ஆசனத்தை இரத்துச் செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி, ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனாலும் குறித்த ரிட் மனுவை, கடந்த ஐந்தாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக நாடாளுமன்ற அமர்வுகளில் ரஞ்சன் ராமநாயக்கவினால் கலந்துகொள்ள முடியாத நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த ஆசன வெற்றிடத்திற்காக அஜித் மானப்பெரும தற்போது நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.