புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே மூன்றாம் அலை தோன்றுவதற்கான அல்லது தடுப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தவறியமை பண்டிகைக் காலங்களில் கொழும்பில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் ஏராளமான மக்கள் கூட்டத்திற்கு வழிவகுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகள் தொடர்ந்தும் அடையாளம் காணப்படும் இந்த சூழ்நிலையில், சமூகத்திலிருந்து அதிகளவிலான நோயாளிகள் பதிவாகலாம் என்றும் கூறினார்.
இது சுகாதார அறிவுறுத்தல்கள் மீறப்பட்டுள்ளமையை காட்டுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற சூழ்நிலையில் பண்டிகை காலத்திற்குப் பின்னர் நாட்டில் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.