மியன்மார்- யாங்கோன் நகரில் சீனாவுக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலையொன்று, கடந்த புதன்கிழமை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஜே.ஓ.சி.கேலக்ஸி (மியன்மர்) ஆடை நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையின் முதல் தளத்திலேயே கடந்த புதன்கிழமை அதிகாலை 4.37 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மியான்மாரிலுள்ள சீன ஜவுளி மற்றும் ஆடை சங்கத்தின் பொதுச்செயலாளர் லூவோ முஜென் தெரிவித்தார்.
மேலும் தீ விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து சில கருவிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கான காரணங்கள் தொடர்பாக கண்டறியப்படாத நிலையில், அருகிலுள்ள ஏனைய நிறுவனங்களின் சி.சி.டி.வி, காணொளிகளை கைப்பற்றி, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் ஏதும் இடம்பெறவில்லையென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இதுவரை சீனா முதலீடு செய்த 40 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், எதிர்ப்பாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன என்று லூவோ கூறியுள்ளார்.