பழம்பெரும் இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழம் பெரும் இயக்குனரான இவர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களை வைத்து ஏறக்குறைய 70இற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.