பாலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட பொருட் செலவில் முன்னணி நடிகர்கள் நடிக்க தயாரான திரைப்படம் இராமாயணா.
நிதேஷ் திவாரி இயக்கத்திர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் என பலர் நடிக்க உருவான இப்படம் நேற்று (05) பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருந்தது. இராமாயணா என்ற கதை பற்றி தமிழ் மக்களுக்கு அத்துப்படி, என்ன கதை, எப்போது என்ன நடக்கும் என்பதெல்லாம் மக்கள் தெளிவாக கூறுவார்கள்.
இருந்தாலும் நிறைய கலைஞர்களின் முயற்சியில் மிகப்பிரம்மாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்து வருகிறார்கள். அதிலும் இராவணனாக யஷ் நடிப்பிற்கு மக்கள் பெரிய பாராட்டுக்கள் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல் நாளில் இராமாயணா திரைப்படம் செய்துள்ள வசூல் பற்றிய தகவல் வந்துள்ளது. இப்படம் முதல் நாளில் மொத்தமாக 150 கோடி ரூபாவுக்கும் அதிகமாக வசூலித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
















