மறைந்த திரை உலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை எனத் தன் மீது பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுப்பப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:”காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்க்க விரும்புவதில்லை.அவர்கள் என்னுடன் உயிருடன் வாழ்ந்தவர்கள், என் உணர்வுடன் கலந்தவர்கள்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் இணைந்து பணியாற்றி மறைந்த கலைஞர்களை, அவர்களின் வாழ்நாளில் பார்த்த நினைவுகளுடனும் உணர்வுகளுடனுமே நெஞ்சில் வைத்திருக்க விரும்புவதாகவும், அவர்களின் அஞ்சலி கோலத்தைக் காண மனமுவந்து ஒப்புக் கொள்வதில்லை என்றும் அவரது இந்த விளக்கம் உணர்த்துகிறது.
இவரது இந்த உருக்கமான விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















