வெளிநாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச உந்துருளி பந்தயத்தில் பங்கேற்றுள்ள பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமார், போட்டிக்குப் பின்னர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் தனது ரசிகர்கள் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
திரைப்படங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வரும் அதேவேளையில், தனது மோட்டார் பந்தயக் கனவை நிறைவேற்றும் பொருட்டு அஜித் குமார் சர்வதேச அளவில் நடைபெறும் உந்துருளி பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்.
அந்தவகையில், பந்தயக் களத்தில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்த நடிகர் அஜித் குமார் தெரிவித்ததாவது:
“என்னை அன்புடன் வரவேற்ற அனைத்து பந்தய அணிகளுக்கும், சக ஓட்டுநர்களுக்கும் (Drivers) எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் எனது ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றாவது ஒரு நாள் பந்தயக் களத்தில் சாதனை படைத்து எனது ரசிகர்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன்.”
வெளிநாட்டுப் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமார் தெரிவித்த இந்த வார்த்தைகள், தற்போது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பெருமளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

















