இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்கான மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் போட்டி சூடுபிடித்துள்ளது.
‘கிங்’ திரைப்படம் 2026 டிசம்பர் 24 அன்று வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தும் புதிய போஸ்டரை ஷாருக் கான் வெளியிட்ட ஒரு நாள் கழித்து, தற்போது ரொபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) படத்தின் புதிய இந்திய வெளியீட்டுத் திகதியை அறிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ , அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாகவே இந்தியாவில் வெளியாகிறது.
புதிதாகப் பகிரப்பட்ட 40 வினாடி காணொளியில், ரோபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் இந்திய ரசிகர்களை நோக்கி, “நமஸ்தே இந்தியா என்று கூறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தின் புதிய வெளியிட்டுத் திகதியையும் உறுதிபடுத்தினர்.
அவர்களின் அறிவிப்பின்படி,
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாள் முன்னதாக 2026 டிசம்பர் 17 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும்.
ரூஸோ சகோதரர்கள் இயக்கிய ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், ரோபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோரை மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கு (MCU) மீண்டும் கொண்டுவருகிறது.
கிறிஸ் எவன்ஸ் ஸ்டீவ் ரோஜர்ஸாக நடிக்க, ரோபர்ட் டவுனி ஜூனியர் மாபெரும் கொடிய சூப்பர்வில்லனான டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

















