சகவாழ்வு, இன நல்லுறவு மற்றும் சகோதரத்துவத்தை பறைசாற்றுவதிலும் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சிங்கள – தமிழ் புத்தாண்டு என்பது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீண்ட வரலாற்றின் பாரம்பரியமான வாழ்வியல் என்று தெரிவித்துள்ளார்.
“நாட்டின் தேசிய ஒற்றுமையை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டு மக்கள் மகத்தான கலாச்சார விழாவான புத்தாண்டை மிகுந்த பாரம்பரியத்துடனும், மகிமையுடனும் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் சகவாழ்வு, இன நல்லுறவு மற்றும் சகோதரத்துவத்தை பறைசாற்றுவதிலும் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பெறுகிறது.
இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டுகின்ற சிங்கள – தமிழ் புத்தாண்டு போன்ற பண்பாட்டு விழாக்கள் அடிப்படையில் சமூகத்திற்கும் உலகிற்கும் ஒரு ஆசீர்வாதமாகும்.
இயற்கையின் ஆசீர்வாதங்களில் இருந்து சம்பாதித்த செல்வத்தின் நிறைவுப் பலன்களை உலகிற்கு வழங்குதல் மற்றும் உலகத்தின் இருப்புக்கு சூரியனின் தீர்க்கமான பங்கிற்கு நன்றி தெரிவித்தல் என்பது வரலாற்று ரீதியாக இலங்கையர்கள் பின்பற்றும் செயலாகும்.
பிலவ தமிழ்ப் புத்தாண்டும் எதிர்பார்ப்புடன் கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. 2020 தொடக்கம் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள்.
அதற்கு காரணமான கொரோனா வைரஸை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. இயற்கை அன்னையானவள் உலக மக்களை கஷ்டமான காலங்களில் சிந்தித்து செயற்படுத்துவதில் ஒரு புதிய பாடத்தை கற்பித்துள்ளாள்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையர்களாக நாம் கொண்டாடும் சிங்கள – தமிழ் புத்தாண்டு நாட்டு மக்களுக்கு இன்னல்களை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை கொடுத்து, சுபீட்சம் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.“ எனத் தெரிவித்துள்ளார்.