மியன்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில் இரண்டு படகுகளில் 12 மீனவர்கள், சிலாபத்தின் மாரவில பகுதியில் இருந்தும் திருகோணமலை பகுதிகளில் இருந்தும் ஆழ்கடல் மீன்படி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்றிருந்தனர்.
இதன்போது ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் தவறுதலாக மியன்மார் கடற்பரப்பிற்குள் நுழைந்திருந்த நிலையில், அந்நாட்டுக் கடற்படையினர் குறித்த மீனவர்களைக் கைது செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மியன்மார் அரசுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருந்த 12 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மியன்மார்- யெங்கனிலிருந்து சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான Q761 என்ற விமானத்தின் ஊடாக சிங்கப்பூரை வந்தடையவுள்ள மீனவர்கள், அங்கிருந்து Q468 என்ற விமானத்தின் ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.